அன்பின் அழகு

அன்பு
நெகிழச் செய்வது
நெகிழ்ந்து நெகிழ்ந்து
உறுகச்செய்வது
உறுகியும்
தாளாது
மகிழச்செய்வது

நமக்குப் பிடித்தவரை
அனுகச் செய்வது

பழகி முறிந்தாலும்
தனிமையில் இருந்தாலும்
அவரை நினைக்கச் செய்வது

நினைந்து நினைந்து
காலம் கடந்தாலும்
முறிவு மறித்த பிறகு
மீண்டும் கலக்கச் செய்வது

அன்பே
நீ அழகு
தனிமையிலும் கூட

எழுதியவர் : ஸ்ரீதரன் (5-Mar-21, 8:07 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : anbin alagu
பார்வை : 1302

மேலே