தொலைந்து போனவை
தொலைந்து போனவை
தொலைத்து விட்ட
பொருளைத்தான்
கண்ணாடி போட்டு
தேடுகிறேன்
என்னுடனே இருந்தவைதான்
நிரந்தரமாய் இருக்கிறது
எண்ணி எண்ணி
இறுமாந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை விட்டு
போவது தெரியாமலே
எத்தனையோ தவறுகள்
செய்து கொண்டிருந்தேன்
இனி எப்படி
தேடினாலும் என்ன
பயன் ?
என்னை விட்டு
போனவை போனவைதான்
இருக்கும்போது அதன்
அருமை தெரியவில்லை
இழந்த பின்பு
தடியூன்றி
தொலைத்து
விட்ட இளமையை
தேடித்தான் என்ன பயன் ?