மரமே பேசு!
பட்ட மரமீது! ஆதவன்!
ஒளி தொட்ட இடமெல்லாம்
எரிகிறதாம் உடல்!
மழை நீர் தொட்டவுன் வேர் விழிக்குமா?
மண் சுட்ட இடமெல்லாம்
நீர் சுரக்குமா?
பறவைகள் வாழவே
கூடுகள் அமைக்குமா?
கருகிய தேகமெங்கும் இலைகள் துளிர்குமா?
ஈரக் காற்று தான் மெல்ல பேசினாலும்!
சூறாவளி காற்றாக சுழன்டு வீசினாலும்!
பட்ட மரமோ! பட்ட மரம் தானே?
உயிர் விட்ட மரம் தானே!
வேர் கிளம்பி
மண்ணில் தலை சாயும் வரை! ஓய்வெடுப்போம்
தூர தேசத்து பறவைகளாய்
நாமும்! மரமே பேசு!
இந்த பொல்லாத மனிதர்கள் சுவாசிக்க.........
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்