உன் விதி நீயே
உனக்குப்பெயரிடும்போதுதான்
உன்னை ஓர்முறைக் கேட்டார்களா?
உன்னைக்கேட்டுப்பின்னேனும்
உன்பெயர்தான்மாற்றித்தந்தார்களா...???
மதம், படிப்பு, விருப்பு-வெறுப்புகள்...
மனதில் நிறம்மாறும் மாற்றங்கள்...
வாழ்க்கை-வழக்கை நிர்ணயிக்கும்
வழிகள்தான் காட்டி நின்றார்களா...?
எழுதிவிட்டார்களே என எனினும்நீ
ஏங்கிக்கலங்கத்தேவையில்லை
உன் பெயரும் விதியும் மாறும் வழியே
உன் உள்ளுக்குள்ளேதான் உள்ளன...!