பரை என்ற தலைமுறை - வஞ்சிவிருத்தம்
வேரைப் பட்டையை இலையை
நாரைப் பூவைத் தண்டை
கோரைக் கிழங்கைச் செடியை
கீரையைக் கொடியைப் பழங்களை
இரையென வைத்தே நாமும்
அரைத்தோ பறித்தோ புசித்தால்
மரையுள் கவரிபோல் வாழ்வை
தரையில் வாழும் நிலையிலேயே
துரையெனும் இறையொத்த உயர்வில்
சரைக் கட்டிய பொன்னாய்
புரை என்றும் களைந்தே
நுரைபோன்ற சிற்றின்பம் நீக்கினால்
நரை நீக்கிய இளமையோடு
வரைவாய் நல்ல சுறுசுறுப்புடன்
பரை என்கிற தலைமுறை
வரையில் சிறப்பாய் வாழலாமே.
-------- நன்னாடன்