பூவிதழ்நீ மெல்லத் திறந்து
தேன்தமிழ் உன்னிதழி னில்தவழ்ந்து வந்திடின்
என்னிதயத் தில்தேன்ம ழை !
செந்தமிழ்ப் புன்னகை ஒன்றினை நீஉதிர்த்தால்
என்னுள்ளே கற்பனைவா னம் !
பூவிதழ்நீ மெல்லத் திறந்துதமிழ் பேசினால்
ராகங்க ளும்மயங்கு தே !
சிந்தும் இளம்புன் னகைசிந்தும் தேனிதழ்
சிந்துதே செந்தமிழ்நெஞ் சில் !
முல்லையின் வெண்மைமுத் துக்களின் மென்வரிசை
புன்னகை உன்அடையா ளம்