என்னுள்ளே என்னவள்
என்னுள்ளே
என்னவள்
எண்ணங்கள் வந்து
வந்து
வண்ணம் பூசிப்
போகிறது.....
நிறம் மாறாத
பூக்கள்
போல
என்னவள் நினைவுகள்
என்னுள்ளே
நின்று
வாழுதே......
திரும்பத்
திரும்ப
என்னுள்ளம்
திருடும்
அன்பான
திருடி.....கைதாகும்
நாளும்
கைகூடுமா.....??
உன்னை
நினைக்காத
நாளும்
இல்லை.....நினைக்காமல்
எனக்கு
வாழ்வும்
இல்லை.....!!