சின்னவளின் சின்னப் பூ

சிரித்த முகத்தில்
சின்னதாய் கோபம்......
கண்களில்
கண்ணீர் துளிகள் ததும்ப.......
தோட்டத்தின் ஒரு ஓரம் நின்று......................
தான் வளர்த்த செடியை பார்த்து
மறக்காமல் பார்க்க வந்தேன்.....
உன்னை பிரிந்த நாட்களில்...
உனக்கு என்னவாச்சு?
தினம் தினம் பூக்கள் தருவாயே.................
வாடிப்போய் தலைகவிழ்ந்து நிற்கிறாயே!!
என் சின்ன விரலால் தண்ணீர் ஊற்றுவேன்................
தலைநிமிரு!!
என் தலையில் சூடிக்கொள்ள பூக்கள் தா..............
என்றாள் சின்னவள்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (22-Mar-21, 5:43 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 111

மேலே