எனக்குள்
அவளை வெறுக்க
நினைக்கும் வேளையில்!
அவளாகவே என்னை நெருங்கி
வருகிறாள்!
எங்கே! மீண்டும் அவள்
பக்கம் சாய்ந்து விடுவேனா
என்ற பயம் தான்
இன்று எனக்குள்!
இப்படியே! இருந்து விடலாம்
என்று நினைக்கும் போது!
எப்படியோ என்னை அந்த
நாட்களுக்கு அழைத்து செல்ல
பார்க்கிறாள்..!
இந்த ஆனந்தம் பிடித்து
இருந்தாலும்!
இன்னும் எவ்வளவு நிமிடம்
நிலைத்து இருக்குமோ என்று
பயம் வந்து விடுகிறது
எனக்குள்!
❤️🤍💙♥️💜🥰💜♥️💙🤍❤️
✍️பாரதி