செத்தோரின் சாம்ராஜ்யம்
முகமூடியாம் - மற்றும்
முற்றிலும் இரண்டு கஜமாம்.
தேர்தல்களில் இவையெல்லாம்
தேவையே இல்லையாம்.
எங்களை ஆள்பவர்களை
என்னதான் இயம்புவோம்...?
சிலர் முறிமூக்கர்களென்றால்
சிலர் மூக்கே இல்லாதவர்களோ...??
மூத்தவர் ஒருவர் சொன்னார்:
மூக்கென்ன? முறிந்தாலென்ன?
முகமேயில்லாதவரும் - பலர்
மூச்சுவிட மறந்தவர்களுமன்றோ...???