இடுகாடுதானோ இது
இரவில் குருடனாய்
இங்கு வாழும் நான்
இரவைப் பகலென்றா
இயம்பிடுவேன்...?
என் விளக்குகளை
எளிதாய் அணைத்து
'ஏன் ஒளியேயில்லை?'
என்போரை என்சொல்வேன்...?
தேசம் செல்லும் வழிகளைத்
துல்லியமாக நோக்கும் நான்
ஆதி மனிதனாய் வாழ்வதுபோல்
ஆதங்கமெனில் அடைகின்றேன்...!
மரணப்படுக்கையில் இருக்கும் நான்
மேலும்-மேலும் உணர்வதெல்லாம்:
சிரித்து-சிரித்தே சிலர் நம்மை
சவப்பெட்டிகளில்அடைக்கிறார்களோ...?