உலகம் புதிது

உலகம் புதிது!

இருந்தவர் எல்லாம் ஓர்நாள்
இல்லை என்றே ஆகும் !
இருப்பவர் யாரும் புதிதாய்ப்
பிறந்தவர் தானே! நாளை
வருபவர் யாரோ? அவரும்
வாழ்ந்திடும் காலம் எதுவோ?
ஒருவரும் அறியார் ! உலகம்
ஒவ்வொரு நாளும் புதிது !

எழுதியவர் : கவிராசன் (23-Mar-21, 11:28 pm)
சேர்த்தது : கவி இராசன்
Tanglish : ulakam puthithu
பார்வை : 173

மேலே