முத்தம் தா
மையிட்ட செல்லக்குட்டி
அழகுன்னு நான் நெனச்சேன்
புழுதி மண் பூசி விளையாடும்
புள்ள கூட அழகுதான்
சில்லறையா சிதற நீ
சிரிச்சா அழகுதான்
அடம்புடிச்சு அழறப்ப உன்
தேம்பல் கூட தேன்
இசையாகுது
நிலா காட்டி சோறூட்டி
உன் வயிறு நிறைய
ஆசைப்பட்டேன்
ஈசிகிட்டும் பூசிகிட்டும்
நீ திண்ண மனசு கூட
நிறைஞ்சிடுச்சி
தாவி குதித்து ஓடயில
சிறகு விரிச்ச தேவதையா
நீ தெரிஞ்ச
உன் குறும்பு தனம்
பாக்கையில வால்கூட
மொளச்சிடுச்சோ
முத்தம் ஒன்னு நான்
கேட்டா என் கன்னத்தை
கடிச்சி நீ சிரிச்ச
சிரிப்புல மெய் மறந்து
போனேனே பொம்முகுட்டி