தாயும் சேயும்

பிள்ளையை முதலில் வரமாய்ப்
பெற்றுக் கொண்டது தாய்மை...
பின்புதான் தவமிருந்தது...
அதற்கு அடையாளமாய்
அழகழகாய் இந்த பொம்மைகள்...

விருதுகளை முதலில்
அம்மாவிடம் வாங்கிக் கொண்டது
வரமாய்க் கிடைத்த பிள்ளை...
விருதுகள் பெறும் தகுதியை
தானே பின்னர்
வளர்த்துக் கொண்டது...
அம்மாவின் அபரித அன்பில்...

தாயின் கைகளில்
உருவான பொம்மைகளில்
தாய்மை இன்னும்
உயிர் வாழ்கிறது...

அதைக் கொண்டாடும்
அழகில் சேய் தன்
வாழ்வின் அர்த்தங்களைக்
இன்னும் கூட்டிக் கொள்கிறது...
👍👏😀🙏💐🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Apr-21, 6:09 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : thayum seyum
பார்வை : 891

மேலே