அம்மா

அது ஒரு அந்திப்பொழுது.நான் என் அம்மாவின் விரலை பிடித்தவாறு சாலையில் சென்றுகொண்டிருக்கிறேன்.மரங்களை வெட்டி இந்த மனிதர்கள் பூமிக்கு செய்த துரோகத்தை நினைத்த வானம்,அடைமழையாய் அழுதுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த தருணம். அழுகை நின்றதே தவிர,அதன் குமுறல் நிற்கவில்லை.அதன் வெளிப்பாடு லேசான இடியும்,மின்னலுமாய்....என் அம்மாவின் கைவிரலை பிடித்து நடந்து கொண்டிருக்கும் நான்,ஒவ்வொரு முறை இடி இடிக்கும்போதும் அந்த விரலை இன்னும் அழுத்தமாக இறுக்கிப்பிடிக்கிறேன்.அந்த அழுத்தத்தின் காரணம் பயம் மட்டுமல்ல,அந்த இடியின் சக்தியைவிட,அதன் ஆபத்திருந்து என்னை காப்பாற்ற என் அன்னையின் பாசத்திற்கு சக்தி அதிகம் என்ற உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடும் கூட.......

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (25-Apr-21, 1:08 pm)
சேர்த்தது : Mohamed iniyas
Tanglish : amma
பார்வை : 328

மேலே