அம்மாவின் ஆசைகள்

என் செல்ல ( வ)த்திற்கு😍

உன் முகம் காண ஆசைதான் காத்திருக்கின்றேன் " அந்த பத்தாவது மாதத்திற்காக ......

"உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி " பாடினான் பாரதி படித்தேன் அன்று .... உணர்கிறேன் இன்று ...... *

ஆயிரம் ஆயிரம் கனவுகளும் , கற்பனைகளும் உன்னைப் பற்றி எனக்கு ! ஆனால்

உதிர்ந்து போன என் கனவுகளும் - செயலாக்கப் படாத என் இலட்சியங்களும் ஒரு போதும் திணிக்கப் போவதில்லை உனக்கு !

உன் வழி உன் விருப்பப் படியே அதை நல்வழிப் படுத்தும் பாலமாய் நான்,
இருந்தும்
எனக்கொரு ஆசை,,

தாய் மொழியை நன்றாக பேசவும் , எழுதவும் , படிக்கவும் தெரியாத இன்றைய குழந்தைகளின் அவல நிலை கண்டு அஞ்சுகிறேன் !

எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக்கொள் !
ஆனால் தாய் மொழியை என்றும் தலைமையாகக் கொள்......

எழுதியவர் : Latha sharmy (6-May-21, 4:31 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : ammaavin aasaikal
பார்வை : 220

மேலே