ஆம் இவன் அப்படியே அன்னைமடியில் உறங்கட்டும்
இவன் அன்னைமடியில்
ஆனந்தமாக இப்பவாது
உறங்கட்டும்.
அள்ளிக் கொஞ்சி விளையாடும் காலம் இது
இவன் மீது அன்பு சொரியும் காலம்
இவன் அமைதியாக உறங்கட்டும்.
எதிரிக்காலத்தில் ஏன்டா பிறந்தோம்
என்று வெறுக்கும்
சலிக்கும்
தவிக்கும் தடுமாறும் காலமும் வரலாம் இவனுக்கு
வேண்டாத கவலையில்
உறக்கத்தை துறக்க வேண்டி வரும்
அன்பைத் தேடி அலையும் காலமும் வரலாம்
எனவே
இவன் அமைதியாக உறங்கட்டும்
இவனைக் கொஞ்சும் காலம் போய்
இவள் இவனைக் கெஞ்சும் காலம் காத்திருக்கிறது
இன்று இவன் நன்றாய்
உறங்கட்டும்
அன்னை மடியில்
ஓடி ஓடித் தேடும் காலம் வரலாம்
அப்படியே விடுங்கள்
அமைதியாய் உறங்கட்டும்.
இருட்டு உலகில் தவறுகள் நடக்கலாம்
தடுமாற்றம் வரலாம்
இவன் உறங்கட்டும்
பாசமும் விலைபோகலாம்
பணமும் இவனை எடைபோடலாம்
வேஷமும் நடைபோடலாம்
தடுமாற்றம் தயங்கித்
தயங்கி தாங்கிடவரலாம்
எனவே
இவன் உறங்கட்டும்
எதிர் காலம் புதிராய் இருக்கலாம்
எட்டிப் பார்க்கும் இடங்களிலெல்லாம்
ஏமாற்றம் வரலாம்
தடுங்கல் தவறுகள்
தடுமாறம் தேடிக்கொண்டிருக்கிறது
எனவே அவன் ஏமாற்றமின்றி
இன்று உறங்கட்டும்
எதிர்காலம் எமனாய் இருக்கலாம்
சோகத்தின் உச்சத்தைத் தொட வேண்டியிருக்கும்
தேகமும் வாழக்கைச் சுமையை சுமக்க வேண்டி இருக்கும்
அவன் உறங்கட்டும்
அவன் அப்படியே உறங்கட்டும்
தீராத நோய் தான் வருமோ
திண்டாட்டம் தான் வருமோ
தீயவர்கள் சகவாசம் தான் வருமோ
தேடித் தேடி மனது நொந்து தான் போகுமோ
காசு பணம் தான்
காரியத்தைச் சாதிக்குமோ
கண்ணீர் கண்ணீர் விட்டே
இரவுகளைக் கழிக்க வேண்டி இருக்குமோ
கவலை என்னும் கூண்டுக்குள்
மனக் கசப்புடன்
அடைய வேண்டியிருக்குமோ
அவமானம் அசிங்கம்
அல்லல் ஆர்ப்பாட்டாம்
இன்னும் என்ன என்ன அசிங்கங்களை
இவன் மேற் கொள்ள வேண்டுமோ
இவன் அப்படியே உறங்கட்டும்
துள்ளும் இளமைக்குள்
எத்தனை தொல்லை வரப்போகின்றதோ
துடிக்கும் இதயம்
எப்படியெல்லாம் நடிக்கப்போகுதோ
யார் யார் காலில் விழ வேண்டுமோ
எதை வாங்க வரிசையில் நிற்க வேண்டுமோ
பேராசை நிறைந்த உலகில்
பேயாய்த் திரியும்
மனதில்
பித்தனாய் திரியும் காலமும் வரலாம்
பசிக்கு உணவு கிட்டுமோ
பாசத்திற்கு அன்பு கிட்டுமோ
அச்சம் அச்சம் என்று
அச்சத்தில் வாழவேண்டுமோ
பேரிடர்களைத்தான்
பார்க்க வேண்டுமோ
பேடியாய் வாழவேண்டுமோ
அவனை அப்படியே உறங்க விடுங்கள்
எதிர்கால ஏமாற்றம் தெரியாது
நிம்மதியாய் உறங்கட்டும்
வெறி பிடித்தவன் போன்று
வெற்றிக்காக போராட வேண்டிருக்கும்
வேண்டாத அவதூரையும்
சுமக்க வேண்டியிருக்கும்
அவன் இன்று உறங்கட்டும்
நடைபிணமாக
நடக்கத் தடுமாறலாம்
விடைதெரியாத
நடை தருமாறலாம்
விடியும் விடியும் என்று
ஏங்கித் தவிக்கலாம்
ஓடி ஓடி வேலை தேடலாம்
ஒரு வேலைச் சோற்றிக்கு வயிரை நிறப்ப போராடலாம்
விஞ்ஞான உலகில் வேண்டாதது
வந்தே அழிக்கலாம்
இவன் இன்று உறங்கட்டும்
சினம் கொள்ள வைக்கலாம்
ஏமாற்றம் தான் எத்தனை வருமோ
சோகத்தின் உச்சத்தைத்தொடலாம்
சொந்தங்கள் வெறுக்கலாம்
சுமைகள் பல சுமக்கலாம்
ஆசைவருமோ அவமாணம் சேர்ந்து வருமோ
நல்லவர் துணைவருமோ
எனவே இவன் உறங்கட்டும்
தன் நம்பிக்கைத் தவிடு பொடியாகலாம்
சுயநலத்தால் சோம்பேறியாகக் கூட மாறலாம்
அன்பை மறக்கலாம்
ஆசைத்தீயில் வதங்கலாம்
ஒன்றும் அறியாத இந்த
பால்வடியும் பாலகன்
இன்று படுத்துறங்கட்டும்
இவன் அப்படியே உறங்கட்டும்
நடுங்கும் வேலை வரலாம்
நலன் பயக்கும் செயல் வரலாம்.
நாதியத்த உலகில்
வீதியில் திரியும் நிலையும் வரலாம்
விலைபோகாத படிப்பால்
வேலையில்லா திண்டாட்டமும் வரலாம்
பாதக உலகில்
பாதாலத்தில் தடுமாறி விழலாம்
அவன் உறங்கட்டும்
பாவிகள் நண்பர்களாய் வரலாம்
பாதகம் பல செய்யலாம்
கேலி கிண்டலுக்கும்
ஆளாகலாம்
கேட்காமலே சோகம் தொடரலாம்
ஒருவேலை சாதனையாளனாய்
வரலாம்
சரித்திரம் படைக்க துடிக்கலாம்
இருந்தாலும்
சாதி மதம் அவன் பெருமையை முடக்கலாம்
இவன் எதிர்காலம்
யார் பையிலோ
யார் கையிலோ
இவன் இப்படியே மௌனமாய் உறங்கட்டும்
இவன் மரியாதை இழக்கலாம்
மானத்தை விடும் நொடி பிறக்கலாம்
அவமானம் என்னும் அசிங்கத்தைச் சுமக்கலாம்
தன்மானம் தவறி தலைகுணியம்
சிறு சிறு சந்தோசத்திற்காக
சிறகடித்தே தேடலாம்
சிந்தும் மழைத்துளிகூட சோகத்தை மூட்டலாம்
அவன் அப்படியே உறங்கட்டும்
பிறறைப்போல் வாழத்தவித்து
பிழைகள் பல செய்யலாம்
வரும் காலத்தில்
வறுமையும் கூட வரலாம்
முத்தான சிரிப்பில்
முகம் மலர்ந்து உறங்கும்
இவன் அப்படியே உறங்கலாம்
அநியாயம் நிறைந்த உலகில்
அவமானங்கள் காத்துக் கொண்டு இருக்கின்றது
அவன் அப்படியே உறங்கட்டும்
தடுமாறும் உலகில் இவன் தலைவிதி எப்படியோ
ஆனந்தமாய் சுருண்டு கிடக்கும் இவன்
சுகமாய் உறங்கட்டும்
இன்று
தேடாமலேயே
பொல்லாப்பு வந்து சேரலாம்
தீராத பேராசை வந்து
தாண்டவம் ஆடலாம்
நிலவொளியைப்
பூசிய இருள் கூட
துன்பம் தரலாம்
இரவை கண்ணீர்மழையில் நனைக்கலாம்
இதயத்தில் சுமக்கமுடியாத பாரத்தை
சுமக்க வேண்டியிருக்கலாம்
காதல் வருமோ
கவலைதான் சேர்ந்து வருமோ
கட்டிண வாழ்வில்
கண்டம் தான் வருமோ
இருக்கும் இடம் தெரியாது
எங்கெங்கோ திரியவேண்டியிருக்கலாம்
திண்ணையில் கூட உறக்கம் இன்றி தவிக்கலாம்
தின்ன சோறு செறிக்காமல் போகலாம்
தின்ன சோறு ஒருவாய் கிடைக்காமல்
போகலாம் .அவன் உறங்கட்டும்
கனிவாக பேச ஆட்கள் இல்லாமல் போகலாம்
அவன் உறங்கட்டும்
தேடல் தேடல் தேடல்
என்று தேடலிலேயே வாழ்கை விடுபடலாம்
மரியாதை இழக்கலாம்
மானம் போகலாம்
தவறுகள் செய்யாமலையே தண்டிகப்படலாம்
தவறுகள் செய்யலாம்
தனிமைத் தொடரலாம்
துணிவை இழக்கலாம்
துணைவியின் துயர்
வதைக்கலாம்
ஆபத்தான நிகழ்வுகளை சந்திக்கலாம்
மனம் சங்கடப்படலாம்
இன்றாவது நிம்மதியாகத் தூங்கட்டும்
பகைவரலாம்
பாசம் மறக்கலாம்
ஏழையாக இருக்கலாம்
ஏக்கத்துடன் வாழலாம்
எட்டு ஏடுத்துவைக்க முடியாத அளவிற்கு
நோய்வாய்ப் படலாம்
நொந்து போகலாம்
அவன் அப்படியே உறங்கட்டும்.
அள்ளி அணைக்கும்
அன்னையின் கரங்களில்
அப்படியே கிடக்கட்டும்
பகைவரலாம்
சொந்த பந்தமே
எதிர்க்கும் வேலை வரலாம்
உடன் பிறந்தோர்
சீற்றம் வரலாம்
நம்மிய நண்பன் கூட
நம்பிக்கைத் துரோகியாக மாறலாம்
கடன் சுமைவரலாம்
வீட்டுக்காரன் வாடகை கேட்டே விரட்டும் வேலையும் வரலாம்
விடிந்தால் என்ன செய்வது என்ற
கவலையும் கூடவே வரலாம்
எனவே இவன் அப்படியே உறங்கட்டும்
பல சந்தோசத்தை இழக்கலாம்
பல சந்தேகங்கள் மனதில் தேங்கலாம்
எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
வெற்றி தோல்வியாகலாம்
விரக்தி தலைக்கு ஏறலாம்
அவன் அப்படியே தூங்கட்டும்
அவன் அன்னையும்
இப்பொழுதுதான் தாங்கமுடியும்
அவளும் இன்று அவனைத் தாங்கட்டும்
பலசாலியாக இருந்தாலும்
பயனற்றுப்போகலாம்
புத்திசாலியாக இருந்தும்
பொருள்இல்லாது
பின்னே தள்ளப்படலாம்
புரியாது தவிக்கலாம்
ஏழையாக இருந்து
எல்லா அசிங்கத்தையும் படலாம்
எதற்காகவும் ஏமாற்றப்படலாம்
எனவே இவன் இன்று உறங்கட்டும்
சாதிக்கும் ஆர்வம் சோதிக்கலாம்
சாதிக்கும் ஆர்வமே
சரித்துவிடலாம்
சாதிக்கலர்கள் சாக்கடையாக்கலாம்
இவன் வாழ்வை
பணம் சார்ந்த மகிழ்ச்சியில்
பாசத்தை துறக்கலாம்
பசிஎடுக்கும் வேலையில்
பணம் இருந்தும்
புசிக்க முடியாமல் போகலாம்
எனவே அவன் அமைதியாய் தூங்கட்டும்
தாங்கப்போகும் உலகம்
தவிப்பையும் வியப்பையும் தறலாம்
சிந்தும் வியர்வை
சீதலம் வரவைக்கலாம்
முழங்கிய குரல்கள்
முடங்கிப்போகலாம்
மோக வலையில்
முழுதாய் விழலாம்
எனவே அவன் இன்றாவது சிரித்துக் கொண்டே உறங்கட்டும்
கட்டாண அழகை இழக்கலாம்
கனவுகண்ட வாழ்க்கையை
துறக்கலாம்
ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்
ஆடம்பரத்தில் வாழ்க்கையை தொலைக்கலாம்
கிடைத்த வாய்ப்பு நழுவிப்போகலாம்
கிடக்கும் விரக்தி
விரட்டிப்பார்க்கலாம்
சிந்தனை சீரழிக்கலாம்
சிந்தனைச் சுதந்திரம் இல்லாமல் சிறைபடலாம்
நாளை என்ன செய்வது என்றே
நாளும் நாளும் யோசித்து
நாட்களை நகர்த்தலாம்
எனனே அவன் அப்படியே அமைதியாய்
இப்போவது தூங்கட்டும்
விவசாயம் விழுந்து
வீதிக்கு உணவு தேடி வரும் காலமும் வரலாம்
மனித நேயம் மறந்து
மனம்போன வாழ்க்கையில் வாழும்
மனித விலங்குகளின் மத்தியல்
மன்றாடும் நிலையும் வரலாம்
இவனை அப்படியே விடுங்கள்
நன்றாய் இவன்
இன்றாவது உறங்கட்டும்
அ. முத்துவேழப்பன்