பூரணனைக் கண்டு கொண்டேன்

பாடிக்கொண்டே விண்ணில் பறந்து செல்லும்
பாடும் பறவையின் ஒலியில் அதன்
எழில் பொங்கும் வண்ணவண்ண இறகுகளில்
உதய சூரியன் ஒளிபட்டு மெல்லமெல்ல
மலர்ந்து விரிந்து பொய்கைக்கே எழில்
தரும் செந்தாமரைப் பூவில் அங்கு
விண்ணையே மறைக்கும் மழைமேகம் கண்டு
எழிலாய் பெருந்தோ கை விரித்தாடும்
நீல மயிலின் தோற்றத்தில் -தானே உண்ணாது
தனது தேகத்தில் சுரக்கும் பாலை
நமக்கு வாரி வழங்கும் கொடைவள்ளல்
பசுவில் ... அதோ பறந்து போகிறதே
அந்த வண்ணத்துப் பூச்சி அதிலும்

படைத்தவனின் பூரணத்துவம் எனக்கு
தெளிவாகிறதே , இறைவா நீபடைத்த
இயற்கையின் ஒவ்வோர் அங்கத்திலும்
பூரணனே உன்னைக் காணவைக்கின்றாய்
என்னே உந்தன் கருணை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Mar-21, 8:21 pm)
பார்வை : 48

மேலே