பறவைகள்

கடற்கரையோரம் அழகான வீடு, வீட்டைச்
சுற்றி மா, பலா, கமுகு இன்னும் கொய்யா
என்று பூவாய் காயாய்ப் பழமாய்
காய்த்து தொங்க அங்கே .... நான் கண்ட
அந்த காட்சி இயற்கைக்கு ஒவ்வாததாய்
இருக்கக் கண்டேன்....
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மர
கிளைகளில் தொங்கும் பறவைக் கூடுகள்
மனிதன் செய்த கூடுகள்... கூடுகளுக்குள்
அடைப்பட்டு கிடக்கும் வித விதமான பறவைகள்
பச்சைக்கிளி, பஞ்ச வர்ண கிளி மைனா
காதல் குருவி இன்னும் சிட்டுக் குருவி...

என்று பலவிதமான பறவைகள்...
அதோ ஒருவன் இப்போது போகிறான்
கைகளில் பறவைகளுக்கு உணவு ஏந்தி
இதோ ஒவ்வோர் கூண்டாய்த் திறந்து
உணவளிக்கிறான்.... கூண்டையும் சுத்தம் செய்கிறான்
கடமை முடிந்து இப்போது அவன் திரும்ப..

உணவு அருந்திய பறவைகள் பாடிட, கத்திட

சில பறவைகள் கூட்டையே உடைப்பது போல்
இலகுகளால் குத்த......

அதோ அங்கே இவற்றை எல்லாம் பார்த்து
ரசிக்கும் அந்த மனிதர்......
இவர் தன்னை ஒரு 'பறவை பார்ப்பவர்'(Bird watcher)
என்று பெருமிதமாய்க் கூறிக் கொள்கிறார்...

அவர் அறியாதது ..... ஐயா பறவைகளைக் கண்டு
நீங்கள் மகிழ்பவராயின்.... அவற்றைப் பேணி
வளர்த்திட என்னபவராயின்.....
ஒரு சோலைக்கோ, வனத்திற்கோ, சென்று
இயற்கைக் சூழலில் இவற்றைக் கண்டு மகிழுங்கள்
காணாது போன குருவியைக் கொண்டு வந்து
சேருங்கள்.....
பறவைகளைக் கூண்டில் அடைக்காதீர்கள்

பறவைக் கூட தன்னிச்சையாய் சுதந்திரமாய்
வாழத்தான் நினைக்கின்றன

சுதந்திரம் தேடித்தான் மனிதரும் அலைகின்றார் ..

.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-21, 2:17 pm)
Tanglish : paravaikal
பார்வை : 121

மேலே