இயற்கை விவசாயம்
இறைவனால்
படைக்கப் பட்ட பூமியில்
இயற்கை அன்னை
பொன்மனம் கொண்டு
பூவாசத்துடன் சிரித்தாள் ..!!
விவசாயியும் ஏறுபூட்டி
மண்ணை பொன்னாக்கி
இயற்கை முறையில்
விவசாயம் செய்து ...!!
கலப்படமில்லாத
நெல்மணி , காய் கனிகளை
நோய் நொடியின்றி
மக்கள் உண்டு மகிழ
விளைவித்து மகிழ்ந்தான்
விஞ்ஞானம் வளர்ந்தது
விவசாயமும் உயர்ந்தது
இயற்கை முறை விவசாயம்
மெல்ல மெல்ல மறைந்தது..!!
செயற்கை முறை
விவசாயத்தில்
விளைநிலங்கள் அழிந்தது
விவசாய உற்பத்தி பெருகியது
இன்று நோய் நொடியுடன்
அடுக்கு மாடி மருத்துவமனையில்
மனிதனின் வாழ்க்கை
மண்ணில் வாழ முடியாமல்
தவிக்கும் மனிதனை பார்த்து
அன்னை பூமி கண்ணீர் விட்டாள்..!!
--கோவை சுபா