பாட்டியா

பாட்டியா?
@@@@@@@@@

பாட்டி, நான் வெளில போயிருந்தபோது என்னைப் பாக்க ஒரு பொண்ணு வந்தாளா?


@@@@@@

ஒரு பொண்ணு வந்தாடி பேத்தி. உம் பேரு என்னடின்னு கேட்டேன்..அவ என்னைப் பாத்து 'பாட்டியா' ன்னு கேட்டாடி

@@@@@@@@

நீங்க என்ன சொன்னீங்க பாட்டி?

@@@@@@@@
எனக்கு கோவம் வந்திருச்சு.."ஏன்டி என்னப் பாத்தா கொமரிப் பொண்ணு மாதிரியா தெரியுது. இன்னம் கொஞ்ச நேரம் இங்க நின்னா உன் வாயக் கிழிச்சிருவேன்டி. . போடா துப்புக் கேட்டவளே. போடி"ன்னு சொல்லி தொரத்திவிட்டுட்டேன்டி பேத்தி

#@@@@@@#@@

அய்யோ பாட்டி அவ பேரு நிஷா பாட்டியா. சுருக்கமா அவளை எல்லோரும் 'பாட்டியா'-ன்னு கூப்புடுவோம்..இந்திக்காரப் பொண்ணு என் வகுப்பில் படிக்கிறாள்.

@@@@@@@

என்ன அநியாயம். செவச்செவனு அழகா இருக்கிற பொண்ணுக்கு 'பாட்டியா'ன்னா பேரு வைக்கிறது. அவ தம்பி பேரு 'பாட்டனா'வா?

@@@@@@@@
பாட்டிம்மா நீங்க அவளைத் தப்பாப் புரிஞ்சிட்ட. அவ பேரு 'நிஷா'. 'பாட்டியா'ங்கிறது அவ குடும்ப் பேரா இருக்கும். இல்லன்னா அவளோட சாதிப் பேரா இருக்கும். தமிழர்கள் தவிர மற்ற மாநிலத்தில் இருக்கிற பிரபலமானவர்களா இருக்கிறவங்கல்ல இருந்து பாமர மக்கள் வரை பெரும்பாலானவங்க அவுங்க சாதிப் பேரை அவுங்க பேருகூட சேத்துக்குவாங்க..கேட்டா குடும்பப்
பேருன்னு (surname) சொல்லுவாங்க.

@@@@@@@@

கல்வியறிவு வந்தாலும் நெறைய விசயங்கள் மாறலடி பேத்தி பொன்மணி..

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■
Nisha = darkness, night

எழுதியவர் : மலர் (28-Mar-21, 4:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 197

மேலே