விண்ணும் மண்ணும்

மண் மேல்
இருப்பவனுக்கு
வானம்
தொலைதூரம் ..!!

மண்ணுக்குள்
சென்றவனுக்கு
விண்ணும் மண்ணும்
ஒண்ணுதான் ..!!

மண்மேல்
இருக்கும்வரை
மனிதனின்
வாழ்க்கை என்பது
கண் சிமிட்டும்
நேரத்தில்
விண்ணில் தோன்றி
மறையும்
விண்மீன்கள் தான்.. !!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Apr-21, 9:08 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vinnum mannum
பார்வை : 115

மேலே