அடைமழை பொழிவும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அடர்மிகு இருளும் பயமுறுத்தும் எங்கும் புவியில் எதனையும்
சுடர்மிகு கதிரும் பயமுறுத்தும் அனலால் உயிர்களை சுட்டே
அடைமழை பொழிவும் பயமுறுத்தும் அதிகமாய் நீரினை பொழிந்தே
அடிக்கின்ற காற்றும் பயமுறுத்தும் பலவித ஓசையில் வீசியே.

கடைநிலை சிந்தனை கைவரப் பெற்ற மனிதரே ஆபத்தோர்
மடையைத் திறந்த வெள்ளமென பேசுவோர் பேச்சும் ஆபத்தாம்
சுடுச்சொல் கொண்டே பேசுவோர் யாரையும் எளிதில் தண்டிக்கார்
படோபகாரப் பேச்சு இறுதியில் பகலில் காயும் நிலவாகுமே.

விடையைக் காணவே எத்திட்டமும் அரசினால் உருவாக்கப் பட்டால்
தடையை ஆக்கும் காரணிகள் அதற்கு எதிராய் தோன்றாது
மடையர்கள் மந்திரியாய் இருக்கும் சபையில் எதுவும் தொய்வே
நடைமுறைச் சட்டமென்பதோ வேண்டும் மக்களின் வாழ்க்கை மேம்படவே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Apr-21, 7:14 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 45

மேலே