உலகை கொரோனாவிலிருந்து
நீலநச்சை கழுத்தில் நிறுத்தி உயிர்தந்தாள் பார்வதி
நீலகண்டன் பாதியுடல் தந்தான் உயிர்தந்த பாவைக்கு
நீலக்கடல் நித்திலம்போல் சிரிக்கும் சித்திரப் பாவையே
நீலஆழி சூழ்உலகை கொரோனாவிலிருந்து காப்பாய் தாயே !
நீலநச் சுக்கழுத்தில் நிற்க உயிர்பெற்றான்
நீலகண்டன் பாதி யுடல்தந்தான் பார்வதிக்கு
நீலக்க டல்முத்துப் போல்சிரிக்கும் சித்திரமே
நீலவாழி சூழ்உல கைகொரோ னாவினின்று
நீலவிழித் தாயேகாப் பாய்
---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
-----மேலே நெடிலடி கலித்துறை