வள்ளுவர் பின்னே குறளடியான் 2

கல்வி
1 ..
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவைஎன் பதறிந்து
நாடிச்செல் கல்பள்ளி யில்

2 .
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகபின்வே லைதேடி
பெற்றோர் தமைவாழ வை

3.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகபின்உற் றார்மற்றோர்
பெற்றவர் போற்ற உயர்

இடுக்கண் அழியாமை
4
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்என் பதினால்
நினைத்து வருந்துதல் வீண்

மானம்

5 .
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடையாத லாலே
இழிசெயல் செய்தவர் கள்

----வள்ளுவர் குறட்பாவவை எடுத்தாண்டு அவர் ஈற்றடியில்
தொடர் சீர் அமைத்து எனது ஈற்றடியை பணிவுடன் வைத்து
வான்புகழ் வள்ளுவப் பெருந்தகைக்கு சிறப்பு செய்யும்
சிந்தியல் வெண்பா சிறு முயற்சி ..

எழுதியவர் : குறளடியான் கவின்சாரலன் (19-Apr-21, 9:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே