சிந்தனைச் செம்மல் குறள்மன்னன்

சிந்தனைச் செம்மல் குறள்மன்னன் வள்ளலவன்
சிந்திக்கா எப்பொருளும் இல்லை உலகினில்
சிந்தியலில் போற்றினேன்நா னும்

அள்ளி வழங்கினான் வள்ளல்நல் வள்ளுவன்
அள்ளித் தெளித்திட்டான் ஆயிரமாய் வெண்குறட்பா
பள்ளியெல் லாமவன் பாட்டு

முப்பால் தனில்நீ முழுஉல கும்அடைத்தாய்
எப்பாவும் எக்காலும் இஃதிற்கு ஈடில்லை
அப்பா குறளடிமன் னா !

----சிந்தனைச் செம்மலுக்கு ஒரு சிந்தியல் போற்றல்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-21, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே