வாழ்க்கை படகு

மனிதனின்
வாழ்க்கை என்பது
ஆழமான கடலை போல்

அந்த ஆழ்கடலில்
வாழ்க்கை படகை
அமைதியாக செலுத்தும்
மனிதன் நிம்மதியாக
கரையை அடைகிறான் ..!!

மாறாக ....
தனது ஆணவத்தாலும்
ஆடம்பரத்தாலும்
வாழ்க்கை படகை
செலுத்தும் மனிதன் ..!!

திக்கு தெரியாமல்
தவித்து தவறி விழுந்து
கரை ஏற முடியாமல்
நிர்கதியாக நிற்கிறான் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Apr-21, 10:02 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaazhkkai padaku
பார்வை : 354

மேலே