கிளியை வளர்த்து
நேரிசை ஆசிரியப்பா
பாரதிக் குப்பின் பாரதம் பேசுவன்
யாரும் யில்லை மறந்தே அனைவரும்
திராவிட மெனவனத் திச்செல் கின்றார்
கோயிலில் பாரதம் நடத்த வில்லை
சாமியில் லையென் பானே கோயில்
அதர்மக் கர்த்தா கொள்ளை கொள்ளை
வாஉசி பாரதி சிவாவாஞ் சிநாதன்
கொடிகாத் தகுமரன் பல்லா யிரமமாம்
ஓங்கிய தியாகி கள்பார் தமிழர்
உலகில் அவர்பெயர் மறந்த பாவிகள்
கிளியை வளர்த்துப் பொல்லாப் பூனை
யிடம்கொடுத் தக்கதை யிதுதான் கேளு
கட்டிய புதியக் கோவில் தவிற
அனைத்துக் குமண்ணா பெரியார் பேர்கள்
கடைசியில் நாடும் பெரியார் மண்ணாம்
கோழைத் தமிழன் கொதிதான் இல்லை
சிரித்தான் சிரித்தான் சிரித்தான்
நல்ல ஊடக முமெதிர்க் கவில்லை
ஊடகம் நாடகம் சினிமா அவனிடமே
.....