கங்கை தங்கும் விரிசடையில் பாதி நிலவிருக்கும்

மாதிருக்கும் பாதியான் கங்கை தங்கும் விரிசடையில்
பாதி நிலவிருக்கும் திருநீறு பூசிய நெற்றியுடையான்
வாதிட்ட கவிஞனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தான்
கோதிலான் ஆற்றுப் படையில் மகிழ்ந்து நோய்நீக்கினான்
மாதிருக்கும் பாதியான் கங்கைதங் கும்சடையில்
பாதிநிலா நெற்றியில் கண்ணும் திருநீறும்
வாதிட்ட நக்கீர னைஎரித் தான்கண்ணால்
கோதிலான் ஆற்றுப் படையில் மிகமகிழ்ந்தான்
ஆதியுரு பெற்றான்கீ ரன்
-------முறையே கலித்துறை பஃறொடை வெண்பா
திருமுருகாற்றுப் படை எழுதி நக்கீரர் வெம்மை நீங்கப் பெற்றார்
என்பது வரலாறு.