கைக்கூ

புத்தாடை புதுசப்பாத்தும்

ஆசையாய் அணிந்தும்

விடியாமல் அடம் பிடிக்கும் இரவு



கைதாகி விட்டேன் இருட்டறையில்/

வெளிவீச காத்திருக்கேன்/

ஈரைந்து மாதம்/



பசி தாங்கமாட்டான் மகன்

கடன் வாங்கி சமைத்து

காத்திருப்பாள் தாய்



பசியாறி செல்கிறது பூனை

குழந்தை தட்டி விட்ட

பாலை



அப்பா என்றால் பயம்

அம்மா அடிக்கையில் குழந்தை அணைக்கிறது



நாய் வேசம் போட்டார்

குழந்தை சிரிப்பதற்காகவே

அப்பா



முணுமுணுக்கிறது பாடல்

தாழ்ப்பாள் இல்லாத

மலசலகூடத்தில்



உடலுருத்தி உழைக்கிறான்

மடிக்கணினி வாங்க

ஏழை தந்தை



கோயிலில் வாசலில்

பசியோடு அமர்ந்த மனிதன் கைகளை

நீட்டுகின்றான்

பேசாதிருந்த உண்டியல்

நிரம்புகின்றது



மட்டுநகர் கமல்தாஸ்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தஸ் (6-May-21, 2:40 pm)
Tanglish : kaikkoo
பார்வை : 206

மேலே