மாமன் மகள்

மலையில் பூத்த மல்லியே யென்
மாமன் பெத்தமக முல்லையை பார்த்தாயா...


மல்லியே நின்வாசம் புதுசுகம்.
மயக்கும்நின் மணத்தின் காரணமறியேன் யான்...

புது மொட்டாய் பூத்தயென் மாமன்மகள் சுவாசித்த காற்றைதான் யாசித்து பெற்றாயோ இல்லை

இளஞ்சிட்டுதான் அவளை... தானும் மணக்க
பூசி சென்ற சந்தனத்தை அள்ளித்தின்றாயோ...

அத்தைமக அவள் குளித்த பன்னீரில்தான் நனைந்தாயோ ...

பளிங்காய் பாவையாய் கோவைஅவள்பதித்த பாததடத்தில்தான்
நின்தடம் பதித்து செழித்தாயோ....

மல்லியே குண்டுமல்லியே
புதுச்கொடியாய் பூச்செண்டாய்நீ வீசம்வாசம் வந்ததெப்படி யென
கூறிவிடு...

பட்டுசிரிப்புக்காரி பகல்கொள்ளைக்காரி
அவளை பார்த்தேனென்று..

யென்மாமன் மகளின் நவரசவிழி பார்வைதான் உனை பரவசமாக்கியதென்று...

எனையும் பைத்தியமாக்கியதென்று...

எழுதியவர் : பாளை பாண்டி (11-May-21, 2:09 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 194

மேலே