நீ எப்படி குடிவந்தாய் கூச்சமே இல்லாமல் 555
***நீ எப்படி குடிவந்தாய் கூச்சமே இல்லாமல் 555 ***
என்னுயிரே...
உன் மனதில் நான்
இல்லையென்று சொல்லிவிட்டு...
என் மனதில் நீ எப்படி
குடிவந்தாய் கூச்சமே இல்லாமல்...
என் கைபேசியை நீ
எடுக்காத போதெல்லாம்...
உன் மீது கோபம்
தலைக்கு ஏறுகிறது...
என்னைத்தேடி நீ
அருகில் நெருங்க நெருங்க...
கானல் நீரை போல
காணாமல் போய்விடுகிறது...
உன் மீதான
என் கோபம்...
ஒவ்வொரு
முறையும் நீ யாரோ...
நான் யாரோ என்று
சொல்லிவிட்டு...
மீண்டும் மீண்டும்
என்னை நெருங்கி வந்து...
தினம் இம்சைகள்
கொடுப்பது ஏனடி...
உன்னில் இருக்கும்
என்னை மறைத்து கொண்டு...
கண்ணாம் பூச்சி ஏனடி
என் வண்ணத்து பூச்சியே...
நீ வாய்விட்டு
சொல்ல வேண்டும்...
உன் மனதில் நான்
இருக்கிறேனென்று...
எப்போது மலரும்
உன் வாய்மொழி என்னுயிரே.....
***முதல் பூ பெ.மணி.....***