அச்சம் என்பது மடமையடா

பயம் என்பது மனிதனின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான். ஆனால் பலர் எப்போதுமே பயத்திலேயே வாழ்கின்றார்கள். மனிதனின் பயம் என்பதே எதிர்காலத்தை நினைத்துதான். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க உங்கள் எண்ணங்களோ எதிர்காலத்தை நினைத்து இருக்கின்றது. இதுதான் பயத்தின் வெளிப்பாடு.

மேலும், பயம் நமது மனதுக்குள் புகுந்து கொண்டால். முதலில் செயல் முடக்கம் இயல்பாக வந்துவிடுகிறது.

பயம் என்பது குடிப்பழக்கத்தைவிட மோசமானது.

பயப்பட வேண்டியதற்கு பயப்படாமல் இருப்பது மூடத்தனம்...என்பது
வள்ளுவன் சொல்.

பயம் என்ற உணர்வு ஒரு மனிதனுக்கு கட்டுப்பாட்டினை தரும் ஒழுக்கத்தை தரும். தன் கடமையை உணர்ந்து செயல்பாடு இருக்கும். ஆனால், எல்லை தாண்டிய பயம் மனிதனை அழித்துவிடும். இதை எப்போதும் மனதில் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தலை வலிக்கும், பல் வலிக்கும் "பயம்" கொள்ளும் மனிதர்களும்
உலகத்தில் இருக்கத்தான் செய்கிறரர்கள். இன்னும் சிலபேர், மருத்துவத்தைப் பற்றிய கட்டுரைகளை படிக்கும் போதும் அல்லது
டி.வி நிகழ்வுகளை பார்க்கும் போதும், தனக்கும் இந்த நோய் பாதிப்பு இருக்கின்றதோ என்று பயந்து, அதன் நினைப்பில் சில காலம் நிலைத்து விடுவார்கள். இப்படிப்பட்ட பயம், தங்கள் வாழ்வினை, உடல் நலத்தினை அழித்துவிடும் என்பதை உணரவேண்டும்.
தொடர் பயம் என்பது "நோய் எதிர்ப்பு" சக்தியினை வெகுவாய் குறைத்துவிடும்.

இப்போது நாம் எல்லோரும் "கொரோனா" என்ற வைரஸ் கண்ணுக்கு தெரியாமல் உலகத்தை எப்படி எல்லாம் அழித்து வருகின்றது.என்ற செய்தியினை படிக்கும் போதும், டி.வி யில் பார்க்கும் போதும் ஒரு விதமான பயத்தை மனதில் உணர முடிகின்றது. இது போன்ற செய்திகளை, செய்திகளாகப் பார்க்க வேண்டும். நம் மனதின் உணர்வுகளுக்கு தீனியாக மாற்றிவிடக் கூடாது.

மேலும், மருத்தவ அறிவியல் ரீதியாக பயம் குறித்த ஆராய்ச்சியின் அடிப்படையில் "SATHMIN" என்ற மரபணுதான் "பயம்" உருவாக காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனை கண்டறிய உதவியது வழக்கம்போல் ஒரு "எலிதான்".

மனிதனின் வாழ்க்கையில் தேவையில்லாத "அச்சத்தை" தவிர்ப்போம்.
அச்சம் என்பது வேறு ...கடமை என்பது வேறு ...என்பதை உணர்ந்து
கால சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றையும் மனதில் நிறுத்தி
நோய் நொடியில்லா வாழ்க்கை வாழ்வோம் ..வருங்காலம் எல்லோருக்கும் இனியதாக இருக்க இறைவனை வேண்டுவோம்..
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-May-21, 6:11 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 148

மேலே