சித்திரையின் சித்திரமே

“சித்திரையின் சித்திரமே”
சித்திரையின் சித்திரமே
கவியின் காவியமே
கவிகம்பன் வீட்டு
கவிபாடும் கட்டுதறியே!!!

ஆதவனின் அவதாரத்தை
அண்டம் வியா்த்திருக்க
முல்லையில் முளைத்த
பொற்கொடி சிலையே!!!

சித்திரை வெயிலில்
சில்லென்று வீசும்
தென்மேற்கு காற்றே!!!
நற்கரும்பு சாராய்
நன்பசு பாலாய்
கனியிடை சுலையாய்
பனிமலா் தேனாய்
பிறந்திட்டாய் சித்திரையிலே!!!

காலைபொழுது மாலைபொழுது
எப்பொழுதும் உன்பொழுது
இனி என்வாழ்வில்

கோபத்துக்கு சொந்தமே
பாசத்துக்கு பந்தமே
என்னுயிர் நாடியே.!!!
இருபத்திரண்டாம் ஆண்டு
அகவை காணும்
அன்ன பறவையே!!!
வாழ்வாங்கு வாழ்க
வாழும் நாளில்
“என் இம்சையோடு மகிழ்க”.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : வினோ பாரதி (13-May-21, 8:53 am)
சேர்த்தது : வினோ பாரதி
பார்வை : 155

மேலே