நைனா💥

நைனா💥

இரவு ஒன்பது மணி. தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதமாகவே எரியவில்லை.
அந்த கிராமத்து காலணியில் கிட்டதட்ட நாறு வீடுகள் இருந்தாலும், இன்னமும் அடிப்படை வசதி இல்லாமல் இருப்பது ஆச்சிரியம். பிச்சாண்டி வீடு அந்த காலணியில் கடைசி வீடு. கடந்த ஒரு ஆண்டு காலமாக மின்சார கட்டணம் செலுத்தாததால் , பிச்சாண்டி குடிசை வீட்டு மின்சாரம் துண்டிக்கபட்டு இருந்தது.
வீட்டின் கதவை தட்டியதும் அவன் மனைவி தாயம்மா தூக்க கலக்கத்திலேயே எழுந்து வந்து கதவை திறந்தாள். ராந்தர் விளக்கு அவன் வீட்டுக்கு வெளிச்சம் தந்தது. கை,கால் கழவிவிட்டு சாப்பிட தரையில் அமர்ந்தான் பிச்சாண்டி. " மாமா, செட்டியார் காசு கடனா கொடுத்தாரா"
தாயம்மா ஆவலுடன் கேட்க, " பத்தாயிரம் கேட்டேன் , ஆராயிரம் தான் மூனு வட்டி புடிச்சிகினு கொடுத்தாரு" பிச்சாண்டி அவன் மனைவி கேள்விக்கு பதில் சொன்னான். " அந்த செட்டியார் கிட்ட இல்லாத பணமா, கஞ்சன், மாமா உன் மேல அவ்வளவு தான் அந்தாளு நம்பிக்கை வச்சிருக்கான்" தாயம்மா புலம்ம, " விடு , இந்த ஆராயிமாவது கிடைசுதே" பிச்சாண்டி தாயம்மாவை சமாதான படுத்த, " சரி, நாளைக்கு நீ சாந்தி ஊருக்கு போற இல்ல" தாயம்மா கேட்க, " நிச்சயமா, செட்டியார் கொடுத்த பணத்துல, சாந்திக்கு புடவை, ரங்கனுக்கு வெட்டி சட்டை, பேரனுக்கு ரெடிமேடுல இரண்டு சட்டை டவுசர், பேத்திக்கு இரண்டு கவுன், எல்லாம் போக, மீதி இரண்டாயிரத்து ஐநாறு மிச்சம் பணம் இந்தா" பிச்சாண்டி விளக்கினான்.
" முழுவாம வந்துகிற கலையரசிக்கும், அவ ஊட்டுகாருக்கும் மீதி பணத்துல புது துணி இந்த வாரத்துல அவள கூட்டிக்கினுபோய் வாங்கிடரேன்" தாயம்மா சொன்னாள்.
" நெத்திலி கொழப்பு ரொம்ப நல்லா இருக்கு" பிச்சாண்டி ரொம்ப நாள் கழித்து உணவு சுவை உள்ளதால் நிறையவே நிறைவாக சாப்பிட்டான். " மாமா, சாந்திக்கு கொண்டு போற அத்தனை பொருளும் இந்த மூட்டையில கட்டிட்டேன், நீ நாளக்கு அவ ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் பாக்கி, உன் பிராயாண செலவுக்கு முன்னூறு வச்சிக்கோ, அந்த எடுபட்ட பய ரங்னுக்கு தெரியாம என் மவ சாந்தி கிட்ட முழுசா ஆயிரம் ரூபாய் கொடுத்திடு, அப்பதான் அவ பொங்கல சந்தோஷமா கொண்டாடுவா, என் பேச்சு நீ அப்ப கேட்டுயா, தங்கச்சி மவன்னு அந்த குடிகாரனுக்கு என் பொண்ண கட்டி கொடுத்த, பதிலுக்கு  அந்த ராஸ்கோல் இரண்டு குழந்தை மட்டும் தான் கொடுத்தான், மத்தபடி சாராயம் குடிச்சுட்டு தினம் அவள அடிக்கிறது, பொறுப்பு இல்லாம நடந்துகிறது. ராசாத்தி மாதிரி இருக்க வேண்டிய என் மவ சாந்தி, மன அமைதி இல்லாம ரொம்ப கஷ்டபடரா," சொல்லி விட்டு  மகளின் நிலைமை என்னி ஒரு குறை அழதுவிட்டாள்.
" அழதாத தாயம்மா, சரி எல்லாம் காசையும் சாந்திக்கே செலவு பண்ணிட்டா, கலைக்கு என்ன பண்ணுவ"
பிச்சாண்டி கேட்க, " மாமா, மல்லாட்டை சீசன், வேலைக்கு போனதுல இரண்டாயிரம் சேத்து வச்சிருக்கேன், கலை விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்"
தாயம்மா பதில் சொல்ல, " சரி நான் படுத்துக்றேன், விடியகாலை சாந்தி ஊருக்கு போகனும்" " மாமா, நீ வேட்டி சட்டை எடுத்துக்களையா" " எனக்கா, நீ வேற பசங்க சந்தோஷம் தான் முக்கியம்"
" வேண்ணா, இந்த வாரம் கரும்பு வெட்டின பாக்கி கூலி கிடைக்கும், அதுல உனக்கு புடவை, ரவிக்கை வாங்கி தரேன்"
" வேனாம் மாமா, அந்த காசு வந்தா அப்படியே கொடுத்திடு, கலையரசி புள்ள பொறக்கும் போது உதவும்" " நீ சொல்றது சரி " " மாமா" " என்ன தாயி" " இல்ல.. கோவத்துல.. சாந்தி வீட்டுக்காரன் கிட்ட சண்டை எல்லாம் போட்டுக்காத.. என்ன.."
" சரி தாயி"

நல்ல புழுக்கத்தில் உழைத்த களைப்பில் பிச்சாண்டி உறங்கிவிட்டான். தாயம்மா சாந்தியின் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விட்டபடி ஒரு கட்டத்தில் அவளும் உறங்கிவிட்டாள்.


புது துணிமணிகளுடன், சாந்திக்காக தாயம்மா கொடுத்த மூட்டையையும் சுமத்து கொண்டு விடியர்காலையிலேயே சாந்தி ஊருக்கு பஸ்ஸில் கிளம்பிவிட்டான் பிச்சாண்டி. ஒன்றரை மணி பிராயாணம். இறங்க வேண்டிய இடம் வந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கிய பிச்சாண்டிக்கு பசித்தது. காலையில் குளித்துவிட்டு, பச்சை தண்ணிக்கூட குடிக்காம கிளம்பிவிட்டான். நிறைய டீ கடைகள், சின்ன ஹோட்டல்கள் இருந்தது.
டீ குடிக்கலாமா, வேண்டாம், எதுக்கு காசு செலவு செய்யனும், அந்த பத்து ரூவாய், மவ வைத்து பேரன் பேத்திகளுக்கு உதவும். நேற்று அவன் வாங்கிய பீடி கட்டை தன் பட்டாப்பட்டை டிராயரில் இருந்து எடுத்து ஒரு பீடியை பற்ற வைத்து, சாந்தி குக் கிராமம் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்தான். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அவனுக்கு தெரியவந்தது. அவன் செல்ல போகும் குக் கிராமத்திற்கு செல்லும் பஸ் அன்றைக்கு வராது என்று. சரி காலார நடப்போம் என்று நடந்தான். எட்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். வெய்யில் சுட்டெரித்தது. குறுக்கு வழியில் செல்வதால் , நிழலுக்கு நிற்க ஒரு மரம் கூட இல்லை. அந்த ஊர் வயக்காடு வறண்டு பூமியாக பல வெடிப்புகளுடன் காட்சியளித்தது. எதுக்குமே உதவாத வேலிக்காத்தான் நிறை காணப்பட்டது.
விவசாயம் முற்றிலும் பொய்த்து போனதால் ஆள் நடமாட்டமே இல்லை.
காலில் செருப்பு இல்லாமல் மூட்டையை தலையில் சுமந்த வந்த பிச்சாண்டிக்கு கண்கள் இருட்டியது. மயக்கம் வரவே அப்படியே தரையில் உட்கார்ந்தான். வயசு அறுபதை  எட்ட போவது. பலம் சுத்தமா போச்சே. இந்த வெய்யிலுக்கே தாக்கு பிடிக்க முடியலையே, தனக்குள் புலம்பி கொண்டான். மெதுவாக எழுந்தான், மயக்கம் தெளிந்தவனாக, ஏதோ ஒரு வேகத்தில் மிக வேகமாக, இன்னும் உள்ள நான்கு கிலோ மீட்டரை கடந்தவன், சாந்தி வீட்டு குடிசை முன் உள்ள தின்னையில் சாயிந்து விட்டான். மயக்க நிலையில் அப்படியே படுத்துவிட்டான். உடல் முழுவதும் வேர்த்துவிட்டது.

மாலை , சூரியன் விடைபெற, சாந்தி கட்டிட சித்தாள் வேலை முடித்து தன் குழந்தைகளுடன் தன் வீட்டை அடைந்தாள்.
" யாரு தின்னையில"
பிச்சாண்டி படுத்துயிருப்பதை பார்த்தவள், சந்தோஷ பெருக்கத்தில் " நைனா, நைனா, எழுந்திரு நைனா, எப்ப வந்த நைனா, டேய் சுரேஷ், யாழினி, தாத்தா வந்திருக்கார் பாரு"
ஆனந்தத்தில் சாந்தி.
மயக்க நிலையில் இருந்து மீண்ட பிச்சாண்டி கண் திறந்து எழுந்து உட்கார்ந்தான். " நான் மதியமே வந்துட்டேன் சாந்தி"
" சாப்பிட்டுயா"
" இல்லம்மா சாந்தி"
" சரி வா உள்ள, மொதல்ல சாப்பிடு, நைனா கூழ் குடிப்ப இல்ல"
" நீ எது தந்தாலும் சரி"
ஒரே நிமடத்தில் கூழை கரைத்து அதில் தயிர் இட்டு, கடிசிக்க பச்சை மிளகாய், வெங்காயம் எடுத்து வந்து  சொம்பில் ஊற்றி பிச்சாண்டியிடம் கொடுத்தாள்,
" நீ சாப்பிட்டியா சாந்தி, புள்ளைங்க சாப்பிட்டாங்களா"
" நைனா, நீ முதல்ல கூழை குடி அப்புறம் பேசு"
கடகடவென்று மூன்று சொம்பு கூழை மடக்மடக்கென்று குடித்தான் பிச்சாண்டி.
பசிக்கு தேவார்திமிதமாக இருந்தது கூழ்.

" சாந்தி , இந்தா இந்த மூட்டையில உனக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் சமாச்சாரம், அப்புறம் முறுக்கு, கமர்கட்டு எல்லாம் இதல இருக்கு"
" எதுக்கு நைனா, இதெல்லாம்"
" இந்தா சாந்தி அப்புறம் இதுல, உனக்கு புடவை ரவிக்கை, ரங்ஙனுக்கு வேட்டி சட்டை, பையனுக்கு இரண்டு செட் புது கால்சட்டை டவுசர், பொண்ணுக்கு இரண்டு கவுன் எல்லாம் வாங்கியாந்துருக்கேன்,"
சாந்தி மிகவும் சந்தோமாக காணப்பட்டாள். அப்பாவின் வரவு ஏதோ மனதுக்கு ஆதரவு தந்தது. குழந்தைகள், கமர்கட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
" பசங்க, பள்ளிக்கூடம் போறாங்களா, இல்லையா"
" அடுத்த வருஷம் தான் நைனா சேர்கனும்"
சுரேஷ் ஆறு வயசு இருக்கும். மேல் சட்டையில்லாமல் , கிழிந்த கால் டவுசருடன் ஆர்வமாக கமர்கட்டை சுவைத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
யாழினி நான்கு வயது இருக்கும், அழக்கு கவுன் என்று ஒன்றை உடுத்தி கொண்டு, அவளும் தன் பாட்டி கொடுத்து அனுப்பிய கமர்கட்டை கடித்து கொண்டிருந்தாள்.
இரவு சாப்பாடு செய்வதற்காக அடுப்பை மூட்டினால் சாந்தி.

எப்படி மான் குட்டி மாதிரி ஓடி, ஆடி திரிந்தவள் இப்படி களையிழந்து, மிகவும் மெலிந்து, முகத்தில் கவலை நிரந்திரமாக தேக்கி, ஏதோ மானம் மறைக்க ஆடை உடுத்தி...
மகளின் நிலை கண்டு உள்ளுக்குள் குமறினான் பிச்சாண்டி.

அடுப்பு புகையில் நடுவிலும்,  தன் அப்பாவுக்காக ஆர்வமாக இரவு சாப்பாடு தயாரித்தாள் சாந்தி.
ஒரு மணி நேரத்தில் சாப்பாடு தயார் செய்தவள், " நைனா நான் குளிச்சிட்டு வந்துடரேன் , அப்புறம் நம்ம சாப்பிடலாம்"

இங்கேயும் மின்சாரம் இல்லை.
மண்ணெண்ணெய் விளக்கு தான்.
கருவாடு குழம்பு மிக அருமையாக இருக்க பிச்சாண்டி நீண்ட நாள் கழித்து ஒரு பிடிபிடித்தான்.
" சாந்தி ரொம்ப நல்லா இருந்துச்சு கருவாட்டு குழப்பு சோறு"
சாந்தி அப்பா பாராட்டை என்னி பூரிப்பு அடைந்தாள்.
" நீயும் சாப்பிடு சாந்தி"
சுரேஷ், யாழினியுடன் அவளும் திருப்தியாக சாப்பிட்டாள்.

" எங்கம்மா ரங்கன்"
" அது பத்தி கேக்காத நைனா"
" ஏன்டா சாந்தி"
" அது எப்பவேன்னா வரும், இல்ல வராது"
" நிறைய குடிக்கிறானா"
" அதே தான் வேலை"
" அடிப்பாவி"
" விடுப்பா..."
" சாந்தி இந்தா, ஆயிரம் ரூபாய், உங்கம்மா, ரங்கனுக்கு தெரியாம கொடுக்க சொன்னா.. இந்தா,"
" எதுகுப்பா"
" வச்சிக்க சாந்தி"


முற்றிலும் நிலை தடுமாறியவனாய் வீட்டின் உள் நுழைந்தான் ரங்கன். சாராய நாற்றம் பிச்சாண்டி குடலை பிடுங்கியது. போதை தளக்கேறியவனாய்  உள்ளே நுழைந்தவன் அப்படியே தடுமாறி விழுந்தவன் மண் தரையில் படுத்துவிட்டான்.

சாந்தியின் அன்றாட வாழ்க்கை இப்படி தான் செல்கிறது என்பதை புரிந்து கொண்ட பிச்சாண்டி
" சாந்தி, இவன அத்துட்டு, பசங்களோட நம்ம வீட்டுக்கு பேசாம வந்துடேன்"
" இல்ல நைனா, நீ மட்டும் பணக்காரனா என்ன , எதுக்கு உனக்கு கஷ்டம், பார்க்கலாம் நைனா"
" இல்ல சாந்தி, இப்படி ஒன்னுத்துக்கும் உதவாதவனோட வாழறது என்ன பிரயோஜணம்"
" திருந்திடுவார் நைனா, கவலை படாதே, எனக்கு இரண்டு கை, கால் இருக்கு நைனா, கல் மண்ணு தூக்கியாவது என் புள்ளைங்கல காபாத்திடுவேன்."
" நீ இவ்வளவு கஷ்ட படனுமா"
" என்ன பன்றது நைனா, இது அவ்வளவு சுலுவா வெட்டர உறவு இல்ல நைனா, யாழினி வளர, வளர நிச்சயமா உங்க மாபிள்ளை திருந்திடுவாருன்னு நம்பிக்கை இருக்கு, அப்புறம் ஆண்டவன் விட்ட வழி"
" நீ தைரியமா இருக்க இல்ல"
" நைனா, நான் ரொம்ப தைரியமா இருக்கேன். திருட கூடாது, பொய் பேச கூடாது, மானத்தோட நான் புள்ளைங்கள காபாத்துவேன் நைனா, நீ ஏன் ரொம்ப கவலை படற, நீ சந்தோஷமா இரு, அம்மாகிட்டேயும் சொல்லு, ஏழை , ஏழையாவே இருக்கனும்ன்னு தலையெழுத்து இல்லையே, ஒரு நாள் எனக்கும் விடியல் பொறக்கும் நைனா"

ஆயிரம் சமாதானம் சாந்தி சொன்னாலும், பிச்சாண்டி அவள் வறுமையான, வெறுமையான வாழ்க்கையை நினைத்து கலங்கிப்போனான்.

அதிகாலை தூக்கம் கலைந்த சாந்தி, கண் விழித்து பார்த்தாள். நைனாவை காணவில்லை. வாசல் தின்னையில் பார்த்தாள் அங்கும் நைனா இல்லை.
" பொண்ணு படற கஷ்டத்தை பார்க்க முடியாத நீ, காலையிவேயே ஊர பார்த்து நடையை கட்டிட்டுடியா நைனா.... அவள் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது.

- பாலு.

எழுதியவர் : பாலு (13-May-21, 3:53 pm)
சேர்த்தது : balu
பார்வை : 86

மேலே