பூ மழை தூவி

பூ மழை தூவி

பூவாளி கொண்டு
தெளிக்கிறதோ வானம்
முகம் கொண்டு
மேலே பார்க்க
முகம் முழுக்க
வந்து விழும்
பூவின் துளிகளாய்
மழை துளிகள்

காற்றின் இ(ரை)சைச்சல்
இல்லாமல் அமைதியாய்

எங்கோ பொங்கி
பெருகும்
கடல் அலைக்கும்
சூறைக்காற்றுக்கும்

இங்கே கோவையில்
முணுமுணுத்து
அமைதியாய்
ஆர்ப்பாட்டமில்லாமல்
நாள் முழுவதும்
மழையை தூவி
கொண்டிருக்கிறாய்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-May-21, 12:32 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : poo mazhai thoovi
பார்வை : 108

மேலே