உஷா வர்றாள் ஓய்வின் நகைச்சுவை 263

உஷா வர்றாள்
ஓய்வின் நகைச்சுவை: 263

மனைவி: ஏன்னா!உங்க பழைய செல்லுலே இரண்டு நாளா உஷா 2 நாளிலே டெலிவரி, நாளைக்கு டெலிவரின்னு மெசேஜ் வந்துண்டே இருக்கு. செத்தே பாருங்கோ! இந்த வயசிலே நேக்கு அதிர்ச்சி தாங்கிற சக்தி இல்லை சொல்லிப்புட்டேன்! அப்புறம் உங்க இஷ்டம் (கண்ணை கசக்குகிறாள்)

கணவன்: என்னடீ காத்தலேயே உளறுரே!

மனைவி: நான் நான் உளறுறேனாக்கும். சொல்லறச்சே தப்பாத்தான் தெரியும் நீங்களே பாருங்கோ

கணவன்: ஐயோ ராமா! ஏண்டி ஒழுங்கா கம்ப்ளீட்டா பார்க்கிறதில்லை அவன் தான் நாம ஆர்டர் பண்ணின உஷா சீலிங் பேன் இன்னைக்கு டெலிவரி ஆகிடும்னு கிளீரா போட்டுருக்கிறானே !

மனைவி: சே புஸ்ன்னு போயிடுச்சே! நான் ஏது உங்களோடு ஒர்க் பண்ணின பழைய உஷாவோனு நினைச்சுட்டேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (16-May-21, 11:52 pm)
பார்வை : 86

மேலே