என் நட்பே நலமா

நட்பே நலமா..?
என் நட்பே நலமா..?
"நட்பு "என்னும் சிறகிலே இணைந்தோம்!!
வாழ்க்கையின் "அழகை "அறிந்தோம்!!
சின்ன சின்ன சிரிப்பில்"கவலைகள்"மறந்தோம்"!!
"அழகான ஆனந்த நாட்களடி..
அசைக்க முடியா நம் நினைவுகளடி..!!"
திசைகள் மாறிப் போன நம் வாழ்வில்
திகட்டாத நம் நட்பின் நினைவுகளோடு
"நலம்"கேட்க வந்தேன்..!!
உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் உறவே!!
உள்ளத்தில் நிறைந்து நிற்கும் நட்பே!!
நலமா...?
உதிராப்பூக்களாய்!!
உள்ளத்து நேசிப்பாய்!!
உறவாடிய என் நட்பே!!
நலமா?
உறவாடிய நட்பின் நினைவுகளோடு!!
உதிரா நட்பின் நினைவுகளோடு!!
"நலம்" கொஞ்சம் கேட்டு வந்தேன்
"தோழியே நலமா..?"
இறைவன் எனக்களித்த வரமடி!!
இணையில்லா பாசமாக வந்தாயடி!!
காலங்களே கடந்து போனாலும்..!!
திசைகளே திசைமாறிப் போனாலும்..!!
நட்பின் நினைவுகளோடு..!!
நலம் கேட்க வருவேன்..!!
நட்புடன்!
--ஆரோக்யா--

எழுதியவர் : ஆரோக்கியமேரி (20-May-21, 5:22 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : en natpe nalamaa
பார்வை : 625

மேலே