தன்னம்பிக்கையே வாழ்வின் இன்பம் 555

****தன்னம்பிக்கையே வாழ்வின் இன்பம் 555 ***


என் தோழியே...


வைரஸை
கண்டு வருந்தாதே...

தன்னம்பிக்கை இருக்கும்
போது மனம் தளராதே...

இறக்கை இல்லாமல் வானத்தில்
உலாவரும் அந்த வெண்ணிலவை பார்...

தன்னம்பிக்கையோடு
நீயும் எதிர்த்து போராடு...

நாளை மீண்டும் நிலவுக்கு
போட்டியாக உலாவரலாம்...

மண்ணில் விழிகள் இல்லாமல்கூட
வாழ்க்கை பலருக்கு உண்டு...

வலிகள் இல்லாமல் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை...

நமக்கு சோர்வு கொடுக்கும்
சில உறவுகள்...

நமக்கு உற்சாகம் கொடுக்கும்
சில உறவுகள்...

வாழ்க்கை பயணத்தில்
பிணிகள் எல்லாம் சிறு கற்கள்...

தன்னம்பிக்கையே மண்ணில்
விழுந்து சிதறிவிடாத பாறை...

பிணிகள்
நிரந்தரமில்லை வாழ்வில்...

துரத்தி அடிப்போம்
பிணியென்னும் கவலையை...

வரவேற்போம் இன்பம்
என்னும் வாசமிகு மலர்களை...

தன்னம்பிக்கையே
நம் வாழ்வின் இன்பம்...

கலங்காதே
என் தோழியே...

கடற்கரையும் காத்திருக்கு
நீ வந்து பாதம் நனைப்பாய் என்று.....*** முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (25-May-21, 5:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 282

மேலே