இனிய காலை நேரம்

சோகமாய் உதித்த காலையெல்லாம்
போகட்டும் மொத்தமாய் மனதை விட்டு
தன்னுடன் சோகம், மயான அமைதி
என்ற இவற்றை எல்லாமும் சேர்த்து
இனி வரும் காலை வேலை ஒவ்வொன்றும்
மலரட்டும் இனிய காலை வேளையாய்
இனிய சோலைக் குயிலோசைக் கேட்க
ஊரின் கோயில் மணியோசைக் கேட்க
மங்கள துதிப் பாடல்கள் ஒலி சேர்த்து
மக்கள் மனதில் பீதி எல்லாம் போக்கி
மீண்டும் நம்பிக்கை சேர்த்து நாளை
நமதே என்று எண்ணி வாழ்ந்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-May-21, 1:58 pm)
Tanglish : iniya kaalai neram
பார்வை : 78

மேலே