வெண்டைக்காய் ஏக்கம்
வெங்காயம் வெட்டும் போது
வெண்ணிலவாய் தெரிந்தாயோ?
வெண்டைக்காய் வேகத்தான்
வெகு நேரம் ஆகிறதே
வெந்நீரில் போட்டாலும்
சாகத்தான் மாட்டீது
வெண்ணிலவே உனைக் காண
வெளி எட்டி பார்க்கிறது
வெந்ததா?- சுவை பார்க்கும்
உன் இதழின் ஓரத்தில்
வெண்டைக்காய் செல்கிறதே
சொர்க்கத்தின் வாசலுக்கு.....