355
போராடும்போது உன் சிறு பிழைகளும் பூதக்கண்ணாடியால் பெருக்கப்படும்...
உலகம் உன்னை வரித்துக்கட்டி வசைபாடும்.....
வெற்றி முகட்டை எட்டிப்பிடித்து சாதனை படைத்துவிட்டால்
உன் வரலாறு பொன்னேட்டில் பொறிக்கப்படும்...
அதில்
உன் சிறு சிறு சறுக்கல்கள் கூட
மைல்கல்லாய் மாறி நிமிர்ந்து நிற்கும்...
உலகம் திரண்டுகூடி இசைபாடும்!

