படுத்தியே வருத்துவதும் கனவுதான்
படுத்தியே வருத்துவதும் கனவோ
படுத்து உறங்கும் போது வருவது தான் கனவோ
பகல் இறவு பார்க்காமல் வருவது தான் கனவோ
கனவுகள் என்ன காணல் நீரோ
கண்ணுக்குத் தெரியாத
கற்பனைத்தேரோ
கனவும் காதல் ஊற்றோ
கட்டுக்கடங்காத நினை ஓட்டமோ
மனஅலைகளின் எண்ண ஓட்டமோ
மனவழிப் பயணமோ
மதிமுகத்தின் பிம்பமோ
கற்பனைக் கதையோ
காணாத தேசத்தின்
கனாப் பயணமோ
விண்வெளிப்பயணமோ
விரட்டியே வரும் மாயையோ
ஆழ்மனது கிளர்ச்சியோ
ஆழ்ந்த உறக்கத்தில்
நினைவலைகளின் எழுச்சியோ
மெல்இசைக்கு
மெட்டு கட்டிய காதல் சுரங்களோ
சுரப்பதென்ன கற்பனையோ
சுற்றுவதென்ன
நினைவுகளோ
கரப்பதென்ன காதல் போதையோ
உள்ளம் என்னும்
உல்லாச ஊர்தியோ
உருகியே வடியும் சோகமோ
கற்பனைத்தேரோ
கட்டிஇழுப்பவர் யாரோ
கசங்கியது இரவோ
கனிந்தது நிலவோ
கட்டவிழ்ந்த நினைவுகளின் ஓட்டமோ
காணல் நீர் தந்த மாயமோ
கண்கள் காணாத காவியமோ
வெட்ட வெளிப் பயணமோ
வெரும் சபலமோ
அண்டம் தாண்டும் ஏவாத ஏவுகணையோ
அஞ்சனத்து பஞ்சனையோ
அந்தரங்க சதுரங்கமோ
ஆடி மகிழ்வது நினைவுகளோ
அச்சாணி இல்லாத
தேரோட்டமோ
வான்கடல் வாசமோ
வந்தே சுற்றும் வெண்புரவியோ
விட்டெரிந்த பருதிபோன்று
சுட்டெரிக்கும் சோகமோ
விதைத்த சிந்தனையின் விருச்சமோ
விதைக்காமல் முளைத்த வித்தகமோ
புத்தகத்தில் படிக்காத
காதல் சித்திரமோ
வில் இல்லா வீரமோ
கல் இல்லாத கோட்டையோ
பல் இல்லாத சொல்லோ
சொல் இல்லா சோகமோ
தூங்காத மனமோ
துடிக்கும் நினைவுகளோ
தாங்காத கரங்களோ
தாக்காத யுத்தமோ
வாங்காத மோகமோ
வாய்விட்டுச் சிரிப்பது மனமோ
செதுக்காத சிற்பமோ
சிலையில்லா கோவிலோ
கனவு என்ன காச்சிய பாலோ
கனவுகள் என்ன
கசிந்திடும் உருக்கமோ
சுவைக்காத ஆசைகளோ
சுமையான அனுபவமோ
கனவென்ன மனவலியோ
நனவிலி மனத்தில் உள்ள
இச்சைகளின் போராட்டமோ
உள்மன ஊசலோ
உலாவரும் உரையாடலோ
ஆழ்மனத்து அந்தரங்க ரகசியமோ
அடிபட்ட வடுக்களோ
காட்சிகளின் தாக்கமோ
சூழ்சிகளின் தயக்கமோ
பேராசையின் பிதற்றலோ
நிராசையின் நீல் சித்திரமோ
தனிமை தந்த பாடமோ
தடுமாறும் நினைவுகளோ
பகல்நினைவுகளோ
படுத்தும் இச்சைகளோ
கனவுகள் காணத்தான்
கண்ணீர் வடிக்கத்தான்
கனவுகள் கலையத்தான்
கனவும் கடல் அலையத்தான்
மனஅலைகள் அல்லாடி தள்ளாடி
துடித்தே வருவது கனவுகள் தான்
இயல்பான Lucid கனவோ
இனக்கமான கனவோ
இருக்கமான கனவோ
பார்த்திருக்க வரும்
பகல்கனவோ
கற்பனைக் கனவோ
அடிக்கடி வரும் கனவோ
அடம்பிடிக்கும் கனவோ
எதிர்காலத்தை நினைவுபடுத்தும்
நினைவூட்டியோ
நிஜங்களின் நிழலோ
நிகழ்வுகளின் தாக்கமோ
இதிகாசக் கனவோ Epic dream
இரக்கமான கனவோ healing
இரக்கமற்ற கனவோ
கனவு கனவுதான்
காண்பது சுகம் தான்
பதற்றத்தில் எழுப்புவதும் கனவுதான்
படுத்தியே வருத்துவதும் கனவுதான்
அ. முத்துவேழப்பன்