முருகனும் அவ்வை பாட்டியும்
தமிழ் திரை உலகம் KBS அம்மையாரை
அவ்வை பாட்டியாக தந்து
நம்மையெல்லாம் மகிழ்ச்சி கொள்ள வைத்த
A P நாகராஜன் அய்யாவையும், KBS அம்மையாரையும்
இந்த கவிதையை படிக்கும் முன் நினைவு கொள்ளுங்கள் ....!!
முருகன் என்றால் அழகு
முத்தமிழ் என்றால் முருகன் ..!!
தமிழ் கடவுள் முருகனுக்கு
முத்தமிழ்க் கற்றவர்கள்
எல்லோரும் அடிமை ,,!!
ஆனால்...
முத்தமிழ் அறிந்த முருகனோ
அவ்வை பாட்டியின்
தமிழ் சொல்லுக்கு அடிமை ..!!
இல்லையென்றால்
"ஆறுவது சினம்
கூறுவது தமிழ்" என்று சொன்ன
அவ்வை பாட்டியின் பின்னால்
சினம் தணிந்து ஓடிச்சென்று
அம்மை அப்பனுடன் இணைந்து
காட்சி கொடுத்திருப்பானா ...!!
தமிழுக்கு முருகன் "கம்பீரம்"
ஆனால் முருகனின் "கம்பீரம்"
அவ்வை பாட்டியின் "கம்பீரமான"
சொல்வன்மையில்..!!
--கோவை சுபா