வாழ்வின் கடைநிலை

கடமை ஆற்றுபவரை
மடமை ஆக்குவோர்
உதவிகள் செய்பவரை
உதறித் தள்ளுவோர்
அகம்குளிர உரையாடி
அகன்றதும் புறம்பேசுவோர்...


உண்மை நெஞ்சங்களை
தவறாக சித்தரிப்போர்
தேவைப்படும் நேரங்களில்
தேவையென கொள்வோர்
கண்கள் மறைப்பதால்
கடந்ததை மறப்போர்...


சிதறிய சிந்தையால்
உதறித் தள்ளுவோர்
பாடங்கள் பலகற்றும்
வேடங்கள் பலவிதமாக
அரிதாரம் மாற்றாது
அவதாரம் மாற்றும்
இதயங்கள் உண்டு
இவ்வுலகில் என்றும் !

மாறுகின்ற காலத்தால்
மாறிவிடும் சூழலால்
கனவும் காணவில்லை
காணவும் ஆவலில்லை !
கற்பனையும் ஈடேறாது
கற்றதும் அனுபவத்தில் !

புரிந்தவருக்கு உரைக்கும்
புரியாதவருக்கு புதிராகும் !
தள்ளாத வயதானாலும்
தனிமை இனிமைதான் !
துள்ளாத நிலையிலும்
துணிவே துணைதான் !

க(வி)தை அல்ல இது
கற்ற பாடம் இது
அறிவுரை அல்ல இது
அனுபவம் தந்தது இது !

உரக்க வாசியுங்கள்
உணரும்வரை யோசியுங்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-May-21, 11:51 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : vaazhvin kadainilai
பார்வை : 222

மேலே