பெண் நெஞ்சின் அழுகை

நெஞ்சே நெஞ்சே
துடிப்பு நின்றால்
மிஞ்சுமா உயிர்?
உடைந்த நெஞ்சினை
சுமக்கும் பெண்ணின்
அவலநிலையினை
நீஅறியாயோ?
சாதிக்க வந்தவளை
சாதனை புரியவை
சாகடிக்காதை மானிடமே
ஏறிவந்த ஆடவள்
கால்களைத் தள்ளி
பதவிஉயர்வு
என்றப்பெயரில்
துன்புறுத்துவது நியாமா
நல்லதைப்புகட்டும் கரம்
எல்லை மீறிபோனது
பணபலம்தந்த தைரியமா?
பொறுத்ததுபோதும் பெண்மையே
சீறிப்பாய் சிங்கத்தைப்போல
வேட்டையாடு சிறுத்தையப்போல
சி்னம்மூட்டிப்பார் கண்களை
சூரியனும் நடுங்கும்
சீண்டும் கரம்
சிதைந்து போகட்டும்
இச்சைப்பேசிய நாவு
அழுகி போகட்டும்
இக்கட்டான சூழ்நிலையில்
உதவிக்கு கூச்சல்இடாதே
வரவழைத்துக்கொள் வீரத்தை
புகட்டு நல்பாடத்தை
சொல்கேளா செவி
செயல்கண்டு சீராகட்டும் சீராகு சீர்கெட்டவனை
இல்லையெனில் விரைவில் சீராக்கப்படுவாய்....

எழுதியவர் : அனுஷியா ராஜி ஆர் ஏ (3-Jun-21, 6:41 pm)
சேர்த்தது : ANUSHIYARAJI405
பார்வை : 139

மேலே