விழித்திரு

" விழித்திரு"

வந்தத் தொற்றை விரட்டிடலாம்
...வாரி இறைக்க பணமிருந்தால் !
எந்தத் தொற்றும் ஓடிடுமே
...எங்கும் நீயும் விழித்திருந்தால் !
சொந்தம் என்றே நுழைந்திடுமாம்
... சுத்தம் இன்றி நீயிருந்தால் !
பந்தம் எல்லாம் ஓடிடுமாம்
...பணமோ கேட்டு நீசென்றால் !


( அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்)

மரு.ப. ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (4-Jun-21, 7:31 am)
சேர்த்தது : PASALI
Tanglish : vizhiththiru
பார்வை : 88

மேலே