விடையறியாது தவித்தேன்

செதுக்கிய சிலையா
வரைந்த ஓவியமோ !
தூரிகையில் பிறந்ததா
தூண்டிலில் கிடைத்ததா ?
வினாக்கள் எழுந்தது
விடையறியா தவித்தேன் !


சிங்கார உருவம் கண்டு
சிந்தையும் சிலிர்த்தது !
பேரழகின் பொருள் புரிந்து
பேருண்மை நான் உணர்ந்தேன் !
முன்னோர் கூறிய உவமைகள்
மனதில் தோன்றி மறைந்தது !


பழனி குமார்
06.06.2021

எழுதியவர் : பழனி குமார் (6-Jun-21, 12:59 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1669

மேலே