சிந்துவும் நாணிமெல்லச் சிரித்தாள்
சிந்து நதியோரம்
சிந்து பாடினாள்
அந்தி நேரம்
செந்தமிழ்க் காதலி
இந்து வானில் வாழ்த்த
சிந்து அலையும் பாட
எந்தன் மார்பில் சாய்ந்தாள்
செந்தமிழ்க் காதல் தென்றல்
வந்துபா தம்தழுவும் நதியலை
அந்திப் பொன்னெழிலில் ஒளிர
இந்து இவள்மார்பில் சாய்ந்திருக்க
சிந்துவும் நாணிமெல்லச் சிரித்தாள் !