இப்படிக்கு உங்கள்அன்புள்ள……

இப்படிக்கு
உங்கள்அன்புள்ள…….!

அன்று
அஞ்சல் அட்டை
கடிதங்களில் எழுதிய
நெஞ்சில் நின்ற
வாக்கியங்கள்…..!

மதிப்பிற்குறிய ,
மருமகப் பிள்ளை மற்றும் மகளுக்கு
நலம் , நலம்கான ஆவல் ..!

இங்கு மழையில்லை ,
நாற்றாங்கால் ஓட்டவில்லை .

பூ பூத்த
கடலசெடி
வாடி வதங்கி நிக்குது !

ஒழுகுற கூறய
பிரிச்சுகட்ட
காசுயில்லை…..!

ஒடம்புக்கு முடியலன்னு
ஓயாத புலம்புது
எனக்கு வாய்த்த குலவிளக்கு,

எனக்கு கூட
கை காலெள்ளாம்
வலிக்குது …..!

காட்ட யாரு
பாத்துக்குவா
பாக்காம விட்டுட்டா
பாழ்பட்டுபோகும் ..!

புழுங்கல்அரிசி கொஞ்சம்
பச்சரிசி, கேழ்வரகு
உளூந்து, சோளமும்
உங்களுக்காக வச்சிருக்கன்.!

நீங்க
அவசியம்
ஒருநாள்
வந்துபோகனும்…!

இப்படிக்கு
உங்கள் அன்புள்ள…….!

எழுதியவர் : இரா.ரமேஷ் (11-Jun-21, 7:42 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 199

மேலே